விளக்கை எப்படி அணைக்க வேண்டும்.? ஏற்றிய விளக்கை வாயால் ஊதியோ, பூவை பயன்படுத்தியோ அணைக்கக்கூடாது.!

விளக்கை எப்படி அணைக்க வேண்டும்.? ஏற்றிய விளக்கை வாயால் ஊதியோ, பூவை பயன்படுத்தியோ அணைக்கக்கூடாது.!



how-to-off-deepam

திருக்கார்த்திகை நன்னாளில், முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு பிரார்த்தனை செய்தால், கார்த்திகை நன்னாளில் கார்த்திகேயன் அருளுவான் என கூறுவார்கள். சிறப்புமிக்க கார்த்திகை தீபத் திருநாள் அன்று, நம் வாழ்வில் ஒளியேற்றம் உண்டாக அனைவரும் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து ஒளியை போற்றி வழிபடுவது வழக்கம்.

நம்மில் பலரும் காலை, மாலையில் நம் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி இறைவனை வழிபடுவது உண்டு. அப்படி பூஜை செய்து முடித்து பூஜை அறையை மூடும்போது தீபத்தை அணைத்து விடுகிறோம். விளக்கு ஏற்றுவது என்பது மங்கலம் தரும் விஷயம். 

karthikai deebam

நல்ல நாளில் நெருப்பை வாயால் ஊதி அணைப்பது கூடாது. ஆன்மிக ரீதியாக இது பாவம். மனோதத்துவ ரீதியாகவும் இச்செயல் அபசகுனம் என்றும் கூறுவார்கள். இந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி வைத்து இனி நடக்கப் போகும் நாட்களெல்லாம் நன்மையாக நடக்கட்டும் என இறைவனை வழிபடுவோம்.

பலருக்கும் இந்த திருக்கார்த்திகை தினத்தன்று விளக்கை எவ்வாறு ஏற்ற வேண்டும்? எவ்வாறு அணைக்க வேண்டும் என்ற சந்தேகம் வரும். ஏற்றிய விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. பூவை வைத்தும் அணைக்க கூடாது. பூ நெருப்பில் கருகுவதும் அபசகுனம் தான். எனவே திரியை உட்பக்கமாக இழுத்து அணைப்பதே நன்மை தரும்.