
World cup 2019 Indian team matches schedule and match list
உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. அணைத்து அணிகளும் வலுவான நிலையில் இருப்பதால் இந்த முறை கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியின் முதல் ஆட்டம் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்து, தென்னாபிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ஜூன் 5 ஆம் தேதி முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் மோதுகிறது.
ஜூன் 9 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனும், ஜூன் 13 ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும், ஜூன் 16 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் இந்திய அணி மோதுகிறது. மேலும், ஜூன் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும், ஜூன் 27 அன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடனும் மோதவுள்ளது.
அதனை தொடர்ந்து ஜூன் 30 ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனும், ஜூலை 2 ஆம் தேதி வங்கதேச அணியுடனும், ஜூலை 6 அன்று இலங்கை அணியுடனும் இந்திய அணி விளையாடுகிறது.
முதல் அரை இறுதி போட்டியானது ஜூலை 9 ஆம் தேதியும், இரண்டாவது அரை இறுதி போட்டி ஜூலை 11 ஆம் தேதியும் நடைபெறுகிறது. உலகக்கோப்பை இறுதி போட்டி ஜூலை மாதம் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement