உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா மிரட்டல் வெற்றி.! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா மிரட்டல் வெற்றி.!

உலக கோப்பை போட்டித் தொடர் இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் பங்கேற்க உள்ளது.

மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கார்டிப்பில் நேற்று பயிற்சி ஆட்டம்  நடைபெற்றது. இதில் இலங்கை அணி ‘டாஸ்’ வென்று முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இதைனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (65), மார்க்ராம் (21) சிறப்பான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த டுபிளசி (88) அரைசதம் அடித்து உதவினார். கடைசி நேரத்தில் பிளக்வாயோ (35) ஓரளவு கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது.  

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் கருணரத்னே (87), ஏஞ்சலோ மாத்யூஸ் (64), மெண்டிஸ் (37) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து இலங்கை அணி 42.3 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இன்று (மே 25) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது. மேலும், மே 28ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் விளையாட உள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo