விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிரபல அணி.! வெறும் 4 பந்துகளில் வெற்றியடைந்த எதிரணி.!

Summary:

இந்தியாவில் உள்ளூர் மூத்த மகளிர் அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்

இந்தியாவில் உள்ளூர் மூத்த மகளிர் அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், நாகாலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நாகாலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய நாகாலாந்து அணியின் வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக அந்த அணியில் சரிபா 9 ரன்கள் எடுத்தார். இதனால், நாகாலாந்து அணி மொத்தம் 50 ஓவர்களுக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை மகளிர் அணிக் கேப்டன் சயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீராங்கனைகள் இஷா ஓஷா, ருஷாலி பகத் ஆகியோர் நான்கு பந்துகளில் வெற்றி இலக்கை (18) அடைந்து, அணிக்கு பத்து விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

 


Advertisement