பாண்டியாவிற்கு காயம் : தொடர் முழுவதும் ஆடுவாரா?
இந்தியாவிற்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ஆசிய
கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா , பும்ராவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக், பகர் சமான் தொடக்க வீரர்களாக களமிறங்க முதல் ஓவரை புவனேஷ்குமார் வீசினார்.பாகிஸ்தான் அணி முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ஓவரை பும்ரா வீச அது மெய்டன் ஓவராக அமைந்தது. இந்த ஓவரை பகர் சமான் சந்தித்தார். பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில் பகர் சமான் ரன் ஏதும் அடிக்கவில்லை.
அடுத்து புவனேஷ்குமார் 3-வது ஓவரை வீசினார். பாகிஸ்தான் தனது முதல் விக்கெட்டை இரண்டு ரன்களுக்குள் இழந்தது. புவனேஷ்குமார் வீசிய முதல் பந்தை இமாம்-உல்-ஹக் எதிர்கொண்டார். முன்னால் வந்து அடிக்க முயன்றபோது பந்து பேட்டின் முனையில் உரசி டோனியின் வசம் சிக்கியது. பாகிஸ்தான் அணியின் 2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் களம் இறங்கினார். இந்த ஓவரில் மீதமுள்ள ஐந்து பந்துகளையும் இவர் எதிர்கொண்டார். இந்த ஓவரில் புவனேஷ்வர் குமார் மெய்டன் ஓவருடன் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் திணறி வரும் பாகிஸ்தான் அணிக்கு 5-வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை அடித்த பகர் சமான் சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி 3 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தது.
அடுத்து சோயிப் மாலிக் களமிறங்கினர். 3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் ஜோடி சேர்ந்தார். 6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்து 7-வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட பாபர் ஆசம் இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.9-வது மற்றும் 20-வது ஓவர்களில் பாகிஸ்தான் பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க ஓவர்களில் தடுமாறிய பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. களத்தில் மாலிக் 10 ரன்னுடனும், பாபர் ஆசம் 13 ரன்னுடனும் உள்ளனர்.