இந்தியா விளையாட்டு

டக்கரு.. டக்கரு.. மைதானத்தில் செம்ம டான்ஸ் போட்ட விராட் கோலி.! வேற லெவல் தலைவா.. வைரல் வீடியோ.!

Summary:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மைதானத்தில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மைதானத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிவருகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்த போட்டி நடந்துவருகிறது.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. மூன்று நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில் மழையால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 


இந்த நிலையில் நேற்றைய போட்டியின்போது மைதானத்தில் பஞ்சாபி பாடல் ஒன்றிற்கு விராட் கோஹ்லி நடனம் ஆடினார். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்துகொண்ட கோலியின் இந்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.


Advertisement