இந்தியாவின் வெற்றிக்கு காரணமான அந்த இரண்டு முக்கிய விக்கெட்டுகள்! வீடியோ!

இந்தியாவின் வெற்றிக்கு காரணமான அந்த இரண்டு முக்கிய விக்கெட்டுகள்! வீடியோ!


Two important wickets of australia leads to indais victory

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு முன்னர் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி பெற்றது. இந்நிலையில் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபின்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினர்.

india vs austrelia

26 ரன்களுக்கே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், உஸ்மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இந்திய அணியின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து உஸ்மான் கவாஜாவை அருமையான ரன் அவுட் மூலம் வெளியேற்றினார் ஜடேஜா.

அதன்பின்னர் அதற்கு அடுத்த விக்கெட்டான ஹேண்ட்ஸ்கம்ப்பை தோனி தனக்கே உரிய ஸ்டைலில் ஸ்டம்பிங் செய்து அனுப்பினார். இந்த இரண்டு விக்கெட்டும் இந்திய அணியின் வெற்றிக்கும் மிக முக்கியமான விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.