சென்னை அணிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்? இரு முக்கிய வீரர்கள் சில போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்.! என்ன காரணம்.?

சென்னை அணிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்? இரு முக்கிய வீரர்கள் சில போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்.! என்ன காரணம்.?


two-csk-players-will-not-chances-to-play


கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், துபாயில் கடந்த 2 வாரங்களாக சிஎஸ்கே அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரின் முதல் ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தநிலையில், ஐபிஎல் டி20 தொடரில் அனைவராலும் உற்றுநோக்கப்படும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

csk

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் தற்போது கரீபியன் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டூப்பிளசிஸுக்கு சமீபத்தில் தலையில் பந்துபட்டு ஏற்பட்ட காயத்தால் கன்கஸனில் வெளியேறினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் அடுத்த சில ஆட்டங்களில் டூப்பிளசிஸ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான சாம் கரனும் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. சாம் கரன் இன்னும் துபாய்க்கு வந்து சேரவில்லை. அவர் இனிவரும் நாட்களில் வந்து சேர்ந்தாலும், அவர் 6 நாட்கள் தனிமைக் காலத்தை முடித்துதான் அணியில் சேர முடியும். அவ்வாறு சேரும்பட்சத்தில் முதல் சில போட்டிகளில் சாம் கரன் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.