விளையாட்டு

அந்த புதிய சாதனையை படைக்க போவது யார்? CSK வீரர்களுக்குள் கடும் போட்டி!

Summary:

The best all rounder watson vs jadega in ipl

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த ஆல்ரவுண்டரும் படைக்காத புதிய சாதனையை படைக்கும் வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷேன் வாட்சனுக்கு உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த ஆல்ரவுண்டரும் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்தில்லை. தற்போதைய சிஎஸ்கே அணியில் உள்ள ஜடேஜா மற்றும் வாட்சன் இந்த சாதனைக்கு மிக அருகில் உள்ளனர்.

ஜடேஜா இதுவரை 1927 ரன்கள் மற்றும் 108 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வாட்சன் 3575 ரன்களுள் 92 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வாட்சன் பந்துவீசவில்லை. எனவே இந்த முறையும் பந்து வீசுவது சந்தேகமே. இதனால் இந்த சாதனையை படைக்கும் அருமையான வாய்ப்பு ஜடேஜாவிற்கு உள்ளது.


Advertisement