விளையாட்டு

பயமே இல்ல.. யாருங்க இவரு.. முதல் மேட்ச் முதல் பந்தே இப்படியா..! சூர்யகுமார் அடித்த அடி.. வைரல் வீடியோ!!

Summary:

தனது முதல் சர்வதேச T20 போட்டியில் முதல் பந்திலையே சிக்ஸர் அடித்த சூர்யகுமார் யாதவின் வீடிய

தனது முதல் சர்வதேச T20 போட்டியில் முதல் பந்திலையே சிக்ஸர் அடித்த சூர்யகுமார் யாதவின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது T20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் அடித்தது. ரோஹித் சர்மா 12 ரன்களிலும், KL ராகுல் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் விராட்கோலியும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தநிலையில் தனது சூர்யகுமார் யாதவ் மிக சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். ஐபில் தொடரில் மும்பை அணியில் விளையாடிவரும் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவிற்கு இதுதான் முதல் சர்வேதேச T20 போட்டி.

Suryakumar smashes six in his first ball in international cricket

தனது முதல் சர்வதேச போட்டியிலையே எந்த ஒரு பயமும், பதட்டமும் இல்லாமல் மிகவும் அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தான் சந்தித்த முதல் பந்திலையே மிக அபாரமாக சிக்ஸர் அடித்து பறக்கவிட்டார் சூர்யகுமார் யாதவ். வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை, 360 டிகிரிக்கு வளைந்து, அதனை சிக்ஸராக மாற்றினார் சூர்யகுமார் யாதவ். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement