விளையாட்டு

அவரா..! சூப்பர் பிளேயர் ஆச்சே..!! அணிக்கு புது கேப்டனை அறிவித்த பிரபல ஐபில் அணி..!

Summary:

ஐபில் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டானாக

ஐபில் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டானாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபில் 2021 போட்டிகள் அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றது. இதற்கு அடுத்த ஆட்டமானது சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே மும்பையில் நடைபெற உள்ளது.

ஐபில் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ஐபில் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டனை மாற்றியுள்ளது.

முன்னதாக ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்தநிலையில், தற்போது அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு புது கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு மூத்த வீரர்கள் அணியில் இருந்தும்கூட, தற்போது அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளா அணியின் விளையாட்டு வீரராக திகழும் இவர், அவருடைய வாழ்க்கையில் ஐ.பி.எல் கேப்டனாக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.


Advertisement