தமிழகம் விளையாட்டு

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் நடராஜனை பாராட்டித்தள்ளிய மருத்துவர் ராமதாஸ்.!

Summary:

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வெற்றிபெற்றது. ஆனாலும் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

இதன் மூலம் 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார். இந்தநிலையில் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.  

இந்தநிலையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மட்டைப்பந்து போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த  சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வீரத்தமிழன் நடராஜனுக்கு வாழ்த்துகள். மட்டைப் பந்து போட்டிகளில் அவர் புதிய சாதனைகளை படைக்க வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.


Advertisement