விளையாட்டு

தோனியை களத்தில் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்ட எதிரணி வீரர்.! வைரலாகும் வீடியோ காட்சி.

Summary:

Rajasthan player greetings dhoni viral video

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை களத்தில் பார்த்ததும் எதிரணி வீரர் கையெடுத்து வணங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலருக்கும் மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இந்நிலையில் மகேந்திர சிங் தோனியை களத்தில் பார்த்ததும் ராஜஸ்தான் அணி இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வல் தோனியை கையெடுத்து வணங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் சிறப்பான சாதனை ...

ஐபிஎல் 13 வது சீசனின் நான்காவது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் கடந்த திங்கட்கிழமை விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி மிகவும் அபாரமாக விளையாடி 216 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தனர்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனிடையே போட்டி நடைபெறும் போது காலத்திற்குள் வந்த மகேந்திர சிங் தோனியை பார்த்த ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வல் மகேந்திர சிங் தோனியை பார்த்ததும் மிகவும் சந்தோஷத்தில் கையெடுத்து வணங்கினார்.

எதிரணி வீரர் என்று கூட பார்க்காமல் தோனியின் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக அவர் செய்த காரியம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.


Advertisement