விளையாட்டு

கே.எல் ராகுல் சதம் அடித்தும் சுமாரான இலக்கு..! இந்த முறையாவது வெற்றிபெறுமா இந்திய அணி..?

Summary:

New Zealand vs Indian 3rd ODI 2020

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 கோப்பையை கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் மயங் அகர்வால் மூன்று பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரிதிவி ஷா 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் விராட்கோலி 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர், KL ராகுல் இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 63 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டம் இழந்தாலும் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த KL ராகுல் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

112 பந்துகளில் 113 ரன்கள் என்ற நிலையில் KL ராகுலும், 48 பந்துகளில் 42 ரன்கள் என்ற நிலையில் மனிஷ் பாண்டேவும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது. 


Advertisement