விளையாட்டு

சென்னை அணியின் தோல்வியை சாதனையாக்கிய மும்பை அணி! என்ன சாதனை தெரியுமா?

Summary:

Mumbai team wins 100 IPL matches

ஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினாலும் கடைசியாக மும்பையுடன் நடந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

https://cdn.tamilspark.com/media/180772re-IPL-2019-MI-vs-CSK-Rohit-Sharma-wicket1.jpg

ஆரமப்பதில் சிறப்பாக பந்து வீசிய சென்னை அணி 19 ஓவருக்கு 141 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தது. ஆனால் 20 வது ஓவரை வீசிய பிராவோ ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் கொடுத்து சென்னை அணியின் வெற்றியை கேள்விக்குறியாக்கினார்.

https://cdn.tamilspark.com/media/180772re-ipl-t20-2019-mi-vs-csk_e549d7f8-5641-11e9-8f69-76e382037a5f.jpg

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து சென்னை அணியை தோல்வி அடைய வைத்தனர். இதன்மூலம் மும்பை அணி அபார வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முன்னேறியது.

இந்த வெற்றி மூலம் இதுவரை நடந்த ஐபில் போட்டிகளில் முதல் 100 போட்டிகளில் வெற்றிபெற்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றது.


Advertisement