சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வி.! மொத்தத்தையும் ஒப்புக்கொண்ட தோனி.!

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வி.! மொத்தத்தையும் ஒப்புக்கொண்ட தோனி.!


ms Dhooni talk about yesterday match

ஐபிஎல் 13 வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கெத்து காட்டும். ஆனால் தற்போது சொதப்பியபடி ஆடி வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டி கடந்த ஆண்டை போல விறுவிறுப்பாக நக்கவில்லை.

14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. ஹைதராபாத் அணி 164 ஓட்டங்களை பெற்றது.165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடந்த 4 போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தடுமாறி வருகிறது. சென்னை அணியில் துவக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.  

MS Dhoni

நேற்றைய ஆட்டம் முடிந்து தோனி கூறுகையில், என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை. எப்படியாவது பந்தை அடித்து விலாச வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு நடந்திருக்கலாம். நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. 

நேர்த்தியுடன் ஆடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கேட்ச்களை எடுக்க வேண்டும், நோ-பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடியவைதான். ரிலாக்ஸாக இருக்கிறோம் அதனால் செய்த தவறுகளையே மீண்டும் செய்கிறோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மென்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும். இந்தப்போட்டியில் பல சாதகமான விஷயங்கள் நடந்தன. எனவே, அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம் என தெரிவித்தார்.