நேற்றைய ஆட்டத்தில் வலிமை அப்டேட் கொடுத்த மொயின் அலி.! தாறுமாறு சம்பவம்.!

நேற்றைய ஆட்டத்தில் வலிமை அப்டேட் கொடுத்த மொயின் அலி.! தாறுமாறு சம்பவம்.!


moyin-ali-played-very-well-yesterday-match

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பட்லர் 49 ரன்கள் எடுத்தநிலையில் ஜடேஜா ஓவரில் அவுட் ஆனார்.

moyin ali

இதனையடுத்து சென்னை அணியின் மொயின் அலி சிறப்பாக பந்து வீசி 3 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து முக்கிய 3 வீரர்களை வீழ்த்தினார். இதற்க்கு முன்பு இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட சென்னை ரசிகர்களுக்கு இந்த ஆட்டத்தில் நல்ல அப்டேட் கொடுத்துள்ளார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.