தமிழகம் விளையாட்டு

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்.! வீரத்தமிழன் நடராஜனை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.!

Summary:

தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இந்திய அணி இன்றைய போட்டியை எதிர்கொண்டது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை எடுத்தது. இதையடுத்து 303-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார். இந்தநிலையில் நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார். 

இந்தநிலையில், நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்! வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்!" என தெரிவித்துள்ளார்.


Advertisement