இப்டி ஒரு ஃபீல்டிங்க பாத்துருக்கவே மாட்டீங்க.. ஆத்தி... ஆச்சரியத்தில் உறைந்து நின்ற ரசிகர்கள்! வைரல் வீடியோ.

இப்டி ஒரு ஃபீல்டிங்க பாத்துருக்கவே மாட்டீங்க.. ஆத்தி... ஆச்சரியத்தில் உறைந்து நின்ற ரசிகர்கள்! வைரல் வீடியோ.


Max bryant viral catch video

ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் பிக் பாஷ் டி 20 லீக் தொடரில் வீரர் ஒருவர் மிக அற்புதமாக பீல்டிங் செய்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் டி 20 லீக் தொடரின் 32 ஆவது போட்டியில் பிரிஸ்பேன் ஹீட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி மெல்போர்ன் அணிக்கு 10 ஓவர்களில் 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணி சற்று அதிரடியாக விளையாடியநிலையில் கடைசி இரண்டு ஓவரில் 46 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுமுனையில் இருந்த நிக் லார்கின் 9 வது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்சரை நோக்கி ஓங்கி அடித்தார்.

பந்து எல்லை கோட்டை தாண்டி சிக்ஸர் என்ற நிலைக்கு சென்றது. அனைவரும் அது சிக்ஸர்தான் என நினைத்திருந்த நிலையில் சிக்ஸர் லைனுக்கு அருகே நின்ற பிரையண்ட் என்ற வீரர், அந்தரத்தில் பறந்து அந்த பந்தை சிக்சருக்கு செல்லவிடாமல் தடுத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் போட்டி வர்ணனையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

பிக் பாஷ் தொடரில் இதற்கு முன்னர் இப்படி ஒரு பீல்டிங்கை பார்த்தது இல்லை எனவும், இதுவே முதல் முறை எனவும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.