
Mankading wicket issue
தென் ஆப்பரிக்க நாட்டின் பெனோனி மைதானத்தில் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் காலிறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 190 ஓட்டங்கள் எடுத்தது.
இதனிஆயடுத்து 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக ஆடியது. அப்போது 27வது ஓவரை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நூர் அகமது வீசினார். அப்போது, பந்து வீசுவதற்கு முன்பு க்ரீஸை விட்டு நகர்ந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முஹம்மது ஹுரைராவை 'மன்கட் அவுட்' செய்தார். இதனையடுத்து 3வது நடுவர் அவுட் என அறிவித்தார்.
Thoughts? 🤔 pic.twitter.com/0hvh48AZDu
— Wisden (@WisdenCricket) January 31, 2020
நிதானமாக விளையாடி வந்த ஹுரைரா 64 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார். ஆனால் இந்த அவுட்டை பாகிஸ்தான் வீரர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனாலும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணி இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது.
சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் வீரரை, ஆப்கான் வீரர் மன்கட் முறையில் அவுட் செய்ததை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியின் அஸ்வின் செய்த 'மன்கட் அவுட்' பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுவும் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement