தமிழகம் இந்தியா விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்ற கொடுத்த புதுக்கோட்டை தடகள வீரர்

Summary:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வென்றுள்ளார் லட்சுமணன் கோவிந்தன்.

lakshmanan govindan க்கான பட முடிவு

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர்  ஒட்டப் பந்தயம் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றிற்கு இந்தியா சார்பில் தமிழகத்தின் லட்சுமணன் கோவிந்தன் தகுதிப் பெற்றார். அவருடன் மேலும் 12 பேர் கலந்து கொண்டனர். இவர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் 29 நிமிடம் 44:91 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

lakshmanan govindan க்கான பட முடிவு

தற்போது ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் லட்சுமணன், பின்வரும் பல சாதனைகளை புரிந்துள்ளார்:

- 2015 யூஹான்,சீனா வில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப் போட்டியில் 13:36.62. நேரத்தில் ஓடி வெண்கலம் வென்றார்.
 
- 2015 யூஹான்,சீனா வில் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 10000மீட்டர் ஓட்டப் போட்டியில் 29:42.81 நேரத்தில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

- 2017 புவனேஸ்வர் வில் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப் போட்டியில் 14:54.48, நேரத்தில் ஓடி தங்கம் வென்றார்.

- 2017 துர்க்மேனிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 5வது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 3,000 மீ ஓட்டப்பந்தயத்தில் 08:02.30 நேரத்தில் ஓடி தங்கம் வென்றார்.


Advertisement