"என்னை ஏன் அணியில் சேர்க்கவில்லை!" அதிர்ச்சியில் புலம்பும் கேதர் ஜாதவ்

"என்னை ஏன் அணியில் சேர்க்கவில்லை!" அதிர்ச்சியில் புலம்பும் கேதர் ஜாதவ்



kedhar jadav why not in odi squad

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. இதில் இந்திய வீரர் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் பெயர் இடம்பெறவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேதர் ஜாதவ் தான் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்ற அதிர்ச்சியில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் கூறியதாவது:

எனக்கு ஏற்பட்டிருந்த காயம் குணமடைந்து தியோதர் டிராபி போட்டித் தொடரில் விளையாடி வருகிறேன். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலிரு போட்டிகளில் நான் இடம் பெறவில்லை, கடைசி 3 போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனநினைத்தேன். ஆனால், ஏன் என்னைத் தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை.

இப்போது நான் அணியிலும் இல்லாத காரணத்தால், நான் ரஞ்சிக் கோப்பையில்தான் விளையாட வேண்டும். நான் காயத்தில் இருந்து மீண்டு அனைத்து உடற்தகுதிகளிலும் தேறிவிட்டேன். நல்ல ஃபார்மில் இருக்கும் போது காயம் அடைந்தால் அது நம்மைக் கடுமையாக பாதிக்கும். அடுத்த வாய்ப்பு கிடைப்பதும் கடினமாக இருக்கும். மீண்டும் அணிக்குள் வருவதற்குள் ஏராளமான போட்டிகளை நாம் இழந்திருக்கக் கூடும். ஆனால் வேதனையாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு செல்லவேண்டும்.

kedhar jadav why not in odi squad

நாம் விளையாடும் போது எச்சரிக்கையுடன் , உடலில் காயம் படாமல் எப்படி விளையாட முடியும். நான் அனைத்து உடற்தகுதி சோதனையிலும் நான் தேறாவிட்டால், என்னைத் தேசிய கிரிக்கெட் அகாடெமி கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டார்கள். ஒருவேளை என்னை அனுமதித்தால் கூட நான் களத்தில் சிக்கிக்கொள்வேன்.

உடற்தகுதி நிபுனர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது, அவர்களிடம் நேர்மையாக நடந்த கொள்ள வேண்டும். அவ்வாறு மறைத்தால், நிச்சயம் நாம் சிக்கிக்கொள்வோம்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் பிரசாத், கேதர் ஜாதவ் உடற்தகுதியை அடிப்படையாக வைத்தே அவரை தேர்வு செய்யவில்லை. ஏற்கனவே பலமுறை ஆடுகளத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறி உள்ளதாக அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.