நடிகை அஞ்சலியா இது.? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?actress-anjali-latest-viral-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அஞ்சலி. முதன் முதலில் தெலுங்கு திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்பு தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரைத்துறையில் நிலைநாட்டியுள்ளார்.

anjali

தமிழில் முதன் முதலில் ராம் இயக்கத்தில் 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவரது நடிப்பு இன்றுவரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதன்பின்பு அங்காடித்தெரு, வத்திக்குச்சி, தூங்கா நகரம், இறைவி, எங்கேயும் எப்போதும் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இவ்வாறு சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வந்த அஞ்சலி சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தற்போது திரைத்துறையில் இருந்து சிறிது நேரம் பிரேக் எடுத்துள்ளார். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் அஞ்சலி அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

anjali

இது போன்ற நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அஞ்சலி தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நடிகை அஞ்சலிக்கு என்ன ஆச்சு? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.