அரசியல் பரபரப்பை உண்டாக்கும் தலைமை செயலகம்: அசத்தல் டீசர் இதோ.!



Thalaimai Seyalagam Teaser Out Now Zee OTt Movie 


வசந்தபாலன் இயக்கத்தில், கிஷோர், ஸ்ரீயா ரெட்டி, பரத், ரம்யா நம்பேசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தலைமை செயலகம் (Thalaimai Syelagam). 

இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கு பின்னர், ஜீ5 சார்பில் எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்படும் பட்டியலில் இப்படம் இடம்பெற்றுள்ளது. இது நேரடியாக மத்திய அரசுக்கு எதிரான முழக்கத்துடன் அரசியல் பரபப்புகளை கொண்ட படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் படத்தின் போஸ்டரில் நேரடியாக மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு என்ற வாசகம் சமீபத்தில் திமுகவினரால் மத்திய அரசை அழைக்க பயன்படுத்தும் சொல்லாக மாறி இருக்கிறது. 

17 மே, 2024 அன்று வெளியாகும் இப்படத்தின் டீசர் காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.