அப்படி கேட்டேன்! ஆனா.. விடிவி கணேஷை அடித்து தாக்கிய நடிகை ராதா.! வைரலாகும் குக் வித் கோமாளி வீடியோ!!cook-with-comali-promo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் 5வது சீசன் கடந்த மாதம் தொடங்கி, 3 வாரங்கள் நிறைவடைந்து கலகலப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வரும் வாரத்திற்கான கலகலப்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

சிறப்பு விருந்தினராக நடிகை ராதா 

இந்த வாரம்  போட்டியாளர்களுக்கு சிக்கன் வைத்து சமையல் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் நடிகை ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளரான விடிவி கணேஷ் ராதாவை பார்த்ததும், எங்க அம்மா கல்யாணம் பண்ணணும், எந்த மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டாங்க. நான் ராதா போட்டோவை காட்டி இதுமாதிரி பொண்ணுதான் வேணும்னு சொன்னேன்.

இதையும் படிங்க: "என் மூஞ்சி நல்லா இல்லன்னு கண்ணாடி கூட பாக்க மாட்டேன்" இயக்குனர் செல்வராகவனின் மனம் வருந்திய பேட்டி..

வைரலாகும் ப்ரமோ வீடியோ 

பிறகு அவங்க திருவனந்தபுரத்தில் ஒரு பொண்ண புடிச்சி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க என கூறி சோகமாக புகழ் மீது சாய்கிறார். பின் ராதா அம்மா கிடைக்காம அம்பிகா அம்மா கிடைச்சிட்டாங்க என கூற, உடனே ராதா 

எங்க அக்கா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு சோகமா? எனக் கேட்டு அவரை கிண்டலாக அடித்துள்ளார். இந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: #JustIN: பிசிஆர் கேசில் சிக்கப்போகும் நடிகர் கார்த்திக்? - தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை ஆடியோவால் அதிரடி உத்தரவு.!