#JustIN: பிசிஆர் கேசில் சிக்கப்போகும் நடிகர் கார்த்திக்? - தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை ஆடியோவால் அதிரடி உத்தரவு.!



National Schedule Caste Commission probe to TN Cyber Cell about Actor Karthick Audio 

தமிழ் திரையுலகில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் கார்த்திக் குமார், தனது முன்னாள் மனைவி பாடகி சுசித்ராவை கண்டிக்கும்போது சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருந்தார். இது தாழ்த்தப்பட்ட மக்களின் மனதை வருத்தமுறும் வகையில் இருந்தது. 

இந்த விஷயம் குறித்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனத்தை குவிக்கும் நிலையில், அதுகுறித்த ஆடியோவுக்கு கார்த்திக் தரப்பு மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மனைவி மேல் இவ்வுளவு பாசமா?.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவகாரத்தால் வருத்தத்தில் நெட்டிசன்கள்.!

தேசிய பட்டியலின ஆணையம் விசாரணைக்கு உத்தரவு

இதனால் விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய பட்டியலின ஆணையம், நடிகர் கார்த்திக்கின் ஆகியோர் குறித்து உரிய விசாரணை நடத்தி, சைபர் கிரைம் அதிகாரிகள் ஆடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கார்த்திக் கூறுவதுபோல ஆடியோ பொய்யாக இருந்தால் அதனை சித்தரித்து வெளியிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளையில், ஆடியோவில் உண்மையில் கார்த்திக் இவ்வாறாக பேசியிருக்கும் பட்சத்தில், கட்டாயம் அவரை தாழ்த்தபோட்டோர் வன்கொடுமை வழக்கில் அதிகாரிகள் கைது செய்வார்கள் என்பது சட்ட வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.  

இதையும் படிங்க: "பாலிவுட்டில் இதனால் தான் நடிக்கல.!" ஓபனாக உண்மையை உடைத்த ஜோதிகா.!