மனைவி மேல் இவ்வுளவு பாசமா?.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவகாரத்தால் வருத்தத்தில் நெட்டிசன்கள்.!Netizens Feeling Sad After GV Prakash Saindhavi Getting Divorce Announcement 

 

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்துடன் வலம்வரும் நடிகர் ஜிவி பிரகாஷ், தனது காதலியான பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இருவரும் காதல் திருமணம் என்பதால், இன்று வரை காதலித்து திருமணம் செய்த தமிழ் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று நள்ளிரவு இவர்கள் தங்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். 

ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி தம்பதி விவாகரத்து

இதனால் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஜிவிபிரகாஷின் பழைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவில் ஜிவி பிரகாஷ், "நாங்கள் இருவரும் பள்ளிப்பருவ காலத்தில் இருந்து தற்போது வரை நாங்கள் காதலித்து வருகிறோம். ஜூன் 27ல் எங்களுக்கு திருமணம் நடந்தது. நாங்கள் எங்களின் பாசத்தை உறுதி செய்ய, மாதா-மாதம் 27ம் தேதி அவர் பரிசு கொடுப்பார். நான் ஏதேனும் பொருட்களை வாங்கி எதிர்பாராத விதமாக பரிசு அளிப்பேன். அவருக்கு பரிசுகள் பிடிக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: 11 வருஷம் வாழ்ந்தது போதும்... மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் ஜி.வி பிரகாஷ்..

படையப்பா வசனத்தை மேற்கோளிடும் நெட்டிசன்கள்

இதனை நடிகர் ரஜினியின் படையப்பா டயலாக்குடன் இணைந்துள்ள நெட்டிசன்கள், காதலிக்கும்போது பெற்றவர்களை மறந்துவிடுகிறீர்கள், திருமணத்திற்கு பின் காதலை மறந்துவிடாதீர்கள் என்ற வசனத்தை மேற்கோளிட்டு பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதுதான் செலிபிரிட்டி வாழ்க்கையா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். 

தொடரும் விவாகரத்துகள்

சமீபகாலமாகவே தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம்வருவோர் எதிர்பாராத விதமாக தங்களின் துணையுடன் விவாகரத்து அறிவிப்பது வாடிக்கையாகிறது. இதற்கான காரணங்கள் சொல்லப்படுவதில்லை, தெரிவதில்லை எனினும் சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்ந்து வருவோர், தங்களின் குடும்பத்திற்குள் ஏற்படும் மனக்கசப்பை சரி செய்ய இயலாததே விவகாரத்திற்கு காரணமாக அமைகிறது என்றும் விபரம் தெரிந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா.? கசிந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!