11 வருஷம் வாழ்ந்தது போதும்... மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் ஜி.வி பிரகாஷ்..gv-prakash-confirms-he-divorce-saindhavi

தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ்.

நட்சத்திர ஜோடிகள்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடச்சத்திர ஜோடிகளில் ஒருவர் ஜி.வி பிரகாஷ், சைந்தவி ஜோடி. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், 11 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததை அடுத்து, தற்போது விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

gv prakash

இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே செய்திகள் உலாவர தொடங்கின. தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களது விவாகரத்து உறுதியான செய்தியை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா.? கசிந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

விவாகரத்தை உறுதி செய்த ஜி.வி பிரகாஷ்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நானும், சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். ஒருவர் மீது ஒருவர் நாங்கள் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது எங்களுடைய தனியுரிமையை மதித்து, புரிந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி" என தெரிவித்துள்ளார்.

gv prakash

நான்கு வயதில் ஒரு மகள்

ஜி.வி பிரகாஷ், சைந்தவி இருவரும் இணைந்து பல்வேறு வெற்றி பாடல்களை ஒன்றாக பாடியுள்ளனர். தற்போது இவர்களது விவாகரத்து அவர்களது ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரைத்துறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்ற மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் ஜிவி பிரகாஷின் ரீபல் பட பாடல் நாளை வெளியீடு; அதிகாரபூர்வ அறிவிப்பு..!