BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தேர்தலுக்கு முன் தெளிவான முடிவு அவசியம்! ஜனநாயகனா..? அரசியலா? விஜய்யை நெருக்கும் நெருக்கடி! அன்று MGR-க்கு நடந்தது நடந்திரும் செங்கோட்டையன் எச்சரிக்கை!!!
திரையுலக சூப்பர் ஸ்டார் விஜய் தற்போது சினிமா மற்றும் அரசியல் என இரு முனைகளிலும் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார். ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் பிரச்சினைகள் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் வியூகங்களும் அவரை முக்கிய முடிவுகளுக்கு தள்ளியுள்ளது.
அரசியல் முதிர்ச்சியான ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளராக உள்ள கே.ஏ. செங்கோட்டையன், விஜய்க்கு தொடர்ச்சியாக அரசியல் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். குறிப்பாக, சினிமாவிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது பெரிய சவாலாக மாறும் என அவர் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன் தெளிவான முடிவு அவசியம் என்ற அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
கூட்டணி தேக்கநிலை
“ஆட்சியில் பங்கு” என விஜய் அறிவித்த பின்னரும், முக்கிய அரசியல் கட்சிகள் இதுவரை தவெக கூட்டணியில் இணையாதது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலை விஜயின் அரசியல் பயணத்திற்கு கூடுதல் அழுத்தமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையனின் அடுத்த அதிரடி சம்பவம்! தவெக விஜய்யுடன் இணையும் அதிமுக அமைச்சர்? அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி!
CBI விசாரணை மற்றும் ரிலீஸ் தடைகள்
கரூர் மாநாட்டு விபத்து தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு விஜய் இரண்டு முறை ஆஜராகி பல மணிநேரம் விசாரிக்கப்பட்டுள்ளார். இதனுடன் சேர்ந்து ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை வாரியம் தடைகள் விதிப்பது போன்ற நிகழ்வுகள், தேசியக் கட்சிகளின் மறைமுக அழுத்தம் என தவெக தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதற்கிடையே, “எந்த அழுத்தத்திற்கும் பணிய மாட்டேன்” என விஜய் உறுதியாக கூறியிருந்தாலும், மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர் வரலாற்று உதாரணம்
இந்த சூழலில் செங்கோட்டையன் எடுத்துக் கூறிய எம்.ஜி.ஆர் சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1977-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடிப்பையும் தொடர முயன்ற எம்.ஜி.ஆருக்கு, அரசியல் ஆலோசகர் நாவலர் நெடுஞ்செழியன் கடும் எச்சரிக்கை விடுத்தார். அதன் விளைவாக தொடங்கப்பட்ட திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதேபோன்ற சூழ்நிலையில் தற்போது விஜய் இருப்பதாக செங்கோட்டையன் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘சினிமாவா அல்லது அரசியலா’ என்ற தெளிவான முடிவு இல்லையெனில், வரலாறு மீண்டும் திரும்பலாம் என அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. விஜய் அரசியல், ஜனநாயகன் ரிலீஸ், 2026 தேர்தல் ஆகிய மூன்று அம்சங்களும் தற்போது ஒரே நேரத்தில் முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது. எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த கட்டத்தில் விஜய் எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் புதிய பாதையை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.