ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா.? கசிந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!gv prakash may divorce with his wife saindavi

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

முதல் படமே ஹிட் :
பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் வெறும் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார். இவர் முதல் முதலில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகிய வெயில் திரைப்படத்தில் தான் இசையமைப்பாளராக பணியாற்றினார். 

அடுத்தடுத்த வாய்ப்பு :
அவரது முதல் படத்திலேயே அசத்தலான திறமையை காட்டி இருந்ததால் அவருக்கு அடுத்தடுத்து கிரீடம், பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், காளை, குசேலன், தலைவா என்று பல படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. 

இதையும் படிங்க: நடிகர் ஜிவி பிரகாஷின் ரீபல் பட பாடல் நாளை வெளியீடு; அதிகாரபூர்வ அறிவிப்பு..!

gv prakash

தேசிய விருது :
கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு அவருக்கு சூரரை போற்று படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த 2015ல் டார்லிங் திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து அதன் பின் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

பாடகியுடன் காதல் திருமணம் :
இவர் பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020இல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இவர்கள் இருவரது காம்போவில் நிறைய ரொமான்டிக் பாடல்கள் வெளியாகி இருக்கின்றது.

gv prakash

விரைவில் விவாகரத்து.?
தற்போது இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், எனவே கடந்த சில மாதங்களாகவே இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருவதாகவும், வெகு சீக்கிரத்தில் அவர்கள் விவாகரத்து வாங்கப் போவதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷின் இசை & நடிப்பில் ரிபெல்; முதற்பார்வை போஸ்டர் உள்ளே.!