"எந்த நாட்டுல இருந்தாலும் கைதுதான்" - கர்நாடகாவை கதிகலங்க வைத்த விவகாரத்தில் சித்தராமையா உறுதி.!Siddaramaiah about Prajwal Issue 

 

கர்நாடகா மாநிலத்தின் ஜெடிஎஸ் கட்சியின் பிரமுகர் ப்ரஜ்வால், பல பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதுகுறித்த விடியோக்கள் என 3 ஆயிரம் சிக்கி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. 

இந்த விஷயம் தொடர்பாக அடுத்தடுத்து காவல் நிலையங்களில் குவிந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. இதனால் பாஜகவுக்கு எதிராக அங்கு காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. 

இந்நிலையில், ப்ரஜிவால் விஷயம் குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் சித்தராமையா, "ப்ரஜிவால் எந்நாட்டில் இருந்தாலும் அவரை கைது செய்து இங்கு அழைத்து வருவோம். இந்த விஷயம் தொடர்பாக பிரதமருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ப்ரஜ்வால் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த விஷயம் தெரியவந்தும் ப்ரஜவாலை பாஜக பாதுகாக்கிறது" என தெரிவித்தார்.