வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
காதலில் விழுந்தாரா சமந்தா.! ஆண் நண்பர் கொடுத்த பரிசு.? துள்ளி குதிக்கும் சமந்தா.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். முதன் முதலில் மலையாளத்தில் அறிமுகமான சமந்தா தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தார்.
மேலும் விண்ணைதாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமிக்கில் சமந்தா கதாநாயகியாகவும், நாக சைதன்யா கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இது போன்ற நிலையில் சமந்தா படப்பிடிப்பில் பிசியாக இருந்து வந்தார். ஆனால் இவருக்கு மயோசைட்டிஸ் எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டு படங்களில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். இந்நோய் பாதிப்பிற்கு சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் தயாரிப்பாளர்களிடம் படங்களில் நடிப்பதற்காக வாங்கிய சம்பள பணத்தை திருப்பி அளித்து விட்டார். தற்போது இந்த நோய் பாதிப்பில் இருந்து வெகுவாக குணமாகி வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில் சமந்தா திரைத்துறையில் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நடிகையான சமந்தா தற்போது தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் இவருக்கு செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதனை புகைப்படமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா. இப்பதிவில் ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.