முன்னாள் அமைச்சருக்கு செக் வைத்த இபிஎஸ்.. பாஜக புகழால் பஞ்சாயத்து.!
சி.வி. சண்முகத்தின் செயல்பாடுகள் அதிமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், சேவல் ஏழுமலையை களமிறக்கி அதிமுக அதிரடி காண்பித்துள்ளது.
மாவட்ட பொறுப்பில் கவனம்:
Viluppuram AIADMK: விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் மிகமுக்கிய புள்ளியாக இருந்துவரும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், வடமாவட்ட அதிமுகவுக்கு தன்னை தளபதிபோல அடையாளம் காட்டியதாக விமர்சனங்கள் இருந்தன. மேலும், விழுப்புரம் மாவட்ட அதிமுக அரசியலில் தன்னை யாரும் முந்திவிடக்கூடாது எனவும், தன்னை முந்திச்செல்ல நினைக்கும் நபர்களை கட்சியை விட்டு வெளியேற்றும் பணியிலும் அவர் சிறப்பாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பதவியை பறித்த எடப்பாடி பழனிச்சாமி.. வேலையை காட்டிய செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.! ஈரோட்டில் பரபரப்பு.!
அரசியல் பிரச்சனை:
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் விழுப்புரத்தில் லட்சுமணன் என்பவரை வேட்பாளராக களமிறக்கிய நபரை கட்சியில் இருந்து வெளியேற்ற முக்கிய காரணமாக இருந்ததாவும் உள்ளூர் வட்டாரங்களில் சொல்லப்படும். தற்போது, திமுகவில் இருக்கும் லட்சுமணன், சி.வி. சண்முகத்தின் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதனால் செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. சேவல் ஏழுமலை, முரளிகுமாரன் உட்பட பலரையும் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
மீண்டும் வந்தார்:
செஞ்சி சேவல் ஏழுமலை அதிமுகவில் இருந்தபோது எம்.எல்.ஏ., ஆரணி தொகுதி எம்.பி. என பொறுப்புகளில் இருந்தவர். அவரின் வளர்ச்சி பிடிக்காமல் சண்முகம் தரப்பு மாற்று கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார் என கூறி அதிமுகவில் இருந்து நீக்க காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடந்த சூழ்ச்சியால் ஓ.பி.எஸ். அணிக்குச் சென்ற முன்னாள் எம்.பி., அதிமுகவில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்து இருக்கிறார். அவர் விழுப்புரம் மாவட்ட அரசியல் குறித்து பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிருப்தியில் தலைமை:
இந்த பேச்சுக்குப்பின் சி.வி. சண்முகத்தின் செயல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தி உணர்வை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவுக்கு செல்லவிருந்த சேவல் ஏழுமலையை அதிமுகவில் இணைத்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயங்கள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கையில், "சி.வி. சண்முகத்தின் அரசியல் செயல்பாடுகள் சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை தந்துள்ளது.

அதிமுக நிர்வாகியின் மோடி புகழ்:
அதிமுக தலைமைக்கு தெரியாமலேயே சண்முகம் டெல்லி மேலிடத்தில் நெருக்கம் காண்பித்து ஒன்றிய அமைச்சர் பதவிக்கு காய் நகர்த்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு வந்து, அதற்கு டெல்லி தலைவர்கள் மூலம் தடைபோட்டுள்ளார். அதிமுக நிகழ்ச்சியிலும் சி.வி. சண்முகம் பாஜகவின் புகழ் பாடுவதை அனைவரும் அறிவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா., இ.பி.எஸ். திட்டங்களை கூட எடுத்துரைக்காமல் மோடி ஜி என்று கூறுகிறார். இதனால் அவருக்கு எதிராக செக் வைக்க தேர்தல் நேரத்தில் சேவல் ஏழ்மலையை இபிஎஸ் களமிறக்கி இருக்கிறார்" என தகவல் தெரிவிக்கின்றனர்.
விரைவில் ஆப்பு?
சேவல் ஏழுமலையின் பொறுப்பு குறித்து மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகத்துக்கு கூட தெரியப்படுத்தாமல் இ.பி.எஸ். காய் நகர்த்தி இருப்பதால், தேர்தலுக்குப்பின் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து சேவல் ஏழுமலைக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பதவி உங்களுக்கு தான்.... வாங்க! மீண்டும் அதிமுகவில் இணையும் முக்கிய புள்ளி! குஷியில் துள்ளும் எடப்பாடி.!