ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பதவி உங்களுக்கு தான்.... வாங்க! மீண்டும் அதிமுகவில் இணையும் முக்கிய புள்ளி! குஷியில் துள்ளும் எடப்பாடி.!
தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் அதிர்வலை கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக உள்கட்சி நிலைமை மீண்டும் கவனத்தின் மையமாகியுள்ளது.
வைத்திலிங்கம் – இபிஎஸ் கூட்டணி மீண்டும்?
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், இபிஎஸ் தரப்புடன் மீண்டும் இணைவார் என பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் திமுகவில் இணைவார் என பேசப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவுக்கு திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தகவல்படி, வைத்திலிங்கம் திரும்பி வந்தால் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என இபிஎஸ் தரப்பு உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்! தவெகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி! நட்சத்திர ஹோட்டலில் நடந்தது தான் காரணமா! TVK வில் பரபரப்பு....
நலம்பெற்று திரும்பும் வைத்திலிங்கம்
பக்கவாதம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைத்திலிங்கம், நலம் பெற்று விரைவில் அரசியல் அரங்கில் மீண்டும் களமிறங்கவுள்ளார். அவர் திரும்பியதும் அதிமுகவில் இணைவு நிகழும் எனக் கூறப்படுகிறது.
அதிமுக உள்கட்சி பரபரப்பு
ஏற்கனவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருவதால் பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதே நேரத்தில், எதிர்ப்பு குரல் எழுப்பும் நிர்வாகிகளை இபிஎஸ் நீக்கி வரும் சூழலில், வைத்திலிங்கம் மீண்டும் அதிமுகவில் இணைய இருப்பது புதிய அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
வைத்திலிங்கத்தின் மீள்இணைவு அதிமுக உள்கட்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அவரின் வருகை கட்சிக்கு வலிமை சேர்க்குமா என்பது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே முக்கிய விவாதமாகியுள்ளது.