தொடரும் போரால் சோகம்; உடல் எடை குறைந்து அவதிப்படும் பாலஸ்தீனிய குழந்தைகள்.!



israel Hamas war food crisis in Palestine 

 

கடந்த 2023 ம் ஆண்டு அக். மாதம் 07ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனியத்தை சேர்ந்த ஆயுதமேந்திய ஹமாஸ் குழு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முதலில் இஸ்ரேல் தரப்பில் 1400 உயிர்கள் கொடூரமாக பறிக்கப்பட்டது.

இதனால் போரில் களமிறங்கிய இஸ்ரேல் முதலில் இழப்பை சந்தித்தாலும், தனது இராணுவத்தை முழுவீச்சில் ஹமாஸுக்கு எதிராக செயல்படவைத்தது. தற்போது அதன் பதில் நடவடிக்கையாக பாலஸ்தீனிய நாடு தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது.

உணவுப்பஞ்சம்., பசி, மருத்துவ பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கு உலக நாடுகள் ஐநா அமைப்பு உதவியுடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. எனினும் அங்கு உணவுப்பஞ்சம் என்பது தொடருகிறது. 

இந்நிலையில், கடுமையான உணவுப்பஞ்சம் காரணமாக 10 கிலோ எடை இருக்க வேண்டிய 2 வயது குழந்தைகள், தற்போது 4 கிலோ அளவில் இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சோமாலியா போல இங்குள்ள குழந்தைகளும் உடல் எடை மெலிந்து உயிரிழக்க நேரிடும் எனவும் அச்சம் கூறிஉள்ளது.