விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சரிவு! ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோப்ரா ஆர்ச்சர்

Summary:

Jofra archer leaves from ipl 2020

கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜோப்ரா ஆர்ச்சர் வரும் ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முன்னதாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆர்ச்சருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஆர்ச்சர் இதுவரை எந்த போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

அடுத்து இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இனிமேல் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தான் பங்கேற்பார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு டி20 உலக்கோப்பை நடைபெறவிருப்பதால் ஆர்ச்சரின் பங்களிப்பு இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் அவரால் கலந்துகொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  


Advertisement