விளையாட்டு

இது செம பிளான் ஆச்சே!! அந்த 3 அதிரடி வீரர்களில் ஒருவரை வாங்க திட்டமிடும் சென்னை அணி!! பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Summary:

சென்னை அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாசல்வுட் விலகியது அடுத்து, அவருக்கு பதிலாக செ

சென்னை அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாசல்வுட் விலகியது அடுத்து, அவருக்கு பதிலாக சென்னை அணி பேட்ஸ்மேனை களமிறக்கலாம் என கூறப்படுகிறது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 9 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியுடன் விளையாடுகிறது.

இந்நிலையில் சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாசல்வுட் சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை அணியில் இருந்து விலகினார். இதனால் ஹாசல்வுட்வுக்கு பதிலாக சென்னை அணி மாற்று வீரராக யாரை வாங்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை அணி இந்த மூன்று வீரர்களில் ஒருவரை வாங்க இருப்பதாக நம்பப்படுகிறது.

1 . இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்:
பவர்ப்பிலே நேரங்களில் அடித்து ஆடுவதற்கு இப்படி ஒரு வீரர் சென்னை அணிக்கு தேவை என ரசிகர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்து வருகின்றனர். அதுபோக அலெக்ஸ் ஹேல்ஸ் T20 போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்.

இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1644 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரின் ஸ்டைர்க் ரேட் 136.66 மற்றும் சராசரி ரன் விகிதம் 31.02 ஆகும். அதுமட்டும் இல்லாமல் அலெக்ஸ் ஹேல்ஸ் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் சென்னை அணி இவரை வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Fans storm Twitter with suggestions for Hazlewood's replacement

2 . நியூசிலாந்து வீரர் டேவான் கான்வாய்:
அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு அடுத்தபடியாக பட்டியலில் இருப்பவர் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வாய். இவரும் மிகசிறந்த T20 வீரர். இதுவரை 14 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ள டேவான் கான்வாய் 11 சர்வதேச டி20 போட்டிகளில், 6 அரை சதத்தையும் விளாசியுள்ளார். இதில் இரண்டு முறை 90+ ரன்களாகும். இவரது சராசரி 59.12 ரன்களாகும்.

இதனால் சென்னை அணி மட்டுமில்லாது மற்ற அணிகளும் இவரை வாங்க அதிக முயற்சி எடுப்பதாக கூறப்படுகிறது.

3 . நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில்:
ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்ற அதிரடி வீரர்களில் இவரும் ஒருவர். டி20 போட்டிகளில் இதுவரை 2939 ரன்கள் அடுத்துள்ள இவர் பல்வேறு T20 சாதனைகளை படைத்துள்ளார். எனவே இவரை சென்னை அணி விலைக்கு வாங்கி, ஓப்பனிங் இறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஹாசல்வுட் போன்ற ஒரு அனுபவமிக்க வேகபந்துவீச்சாளர் சென்னை அணியில் இருந்து விலகியது பெரிய வருத்தம் என்றாலும், ஏற்கனவே சென்னை அணியில் போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், சென்னை அணி மேலும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனை அணியில் எடுத்து மிடில் ஆர்டரில் ஆடவைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.


Advertisement