விளையாட்டு

அதிர்ச்சி! உலகக்கோப்பை தொடரிலிருந்து தவான் திடீர் விலகல்! அதிர்ச்சி காரணம்!

Summary:

Indian cricket player dhawan will not play world cup for next three weeks

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து மற்றும் ஆத்ரேலியா அணிகள் முதல் மற்றும் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஆத்ரேலியாவுடனான போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்திய அணி வீரர் தவான். மிக சிறப்பாக விளையாடிய தவான் 117 ரன் எடுத்தார். மேலும் அந்த போட்டிக்கான ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் தவான்.

இந்நிலையில், இனி வரும் போட்டிகளிலும் தவான் சிறப்பாக செயல்படுவர் என எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் தவானின் கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த மூன்று வாரத்திற்கு தவானுக்கு ஓய்வு வழங்கப்படுவதாகவும், அடுத்த மூன்று வாரங்களில் நடைபெறும் போட்டிகளில் தவான் விளையாடமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அறிவிப்பு இந்திய அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவானுக்குப்பதில் அவர் இடத்தில் யார் விளையாடப்போவது என்பது குறித்தும் செய்திகள் வெளியாகவில்லை.


Advertisement