இந்தியா விளையாட்டு

அசத்தலான ஆட்டம்! அறிவிக்கப்பட்ட சூப்பர் ஓவர்! கடைசி இரண்டு பந்துகளின் திக்.. திக் நிமிடங்கள்!

Summary:

india won super over

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கி பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. 

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பதில் இருந்து அதிரடியாக ஆடியது. இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர்  அறிவிக்கப்பட்டது.

அந்த சூப்பர் ஓவரை இந்திய அணியின் பும்ரா வீசினார் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து இந்திய அணியின் ரோஹித், ராகுல் களமிறங்கினர். இவர்கள் முதல்  பந்துகளில் சொதப்பினாலும் இறுதி இரண்டு பந்தில் ரோஹித் அபார சிக்ஸர் அடித்து 20 ஓட்டங்களை பெற்று இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


Advertisement