விளையாட்டு

347 ரன்கள்..! முதல் சதம்..! நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பறக்கவிட ஷ்ரேயஸ் ஐயர்..!

Summary:

India vs New Zealand 2020 first ODI match update

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டியை அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. இன்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடியுள்ளது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரிதிவி ஷா மற்றும் மயங் அகர்வால் இருவரும் 20 மற்றும் 32 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து விராட்கோலி, ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். விராட்கோலி 51 (63) ரன்களில் ஆட்டம் இழக்க, 103 (107) ரன்கள் அடித்து தனது முதல் சர்வதேச சதத்தை அடித்து அவுட் ஆனார் ஷ்ரேயஸ் ஐயர்.

இதனை தொடர்ந்து விளையாடிய KL ராகுல் 64 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காத நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 347 ரன்கள் அடித்துள்ளது. 348 என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.


Advertisement