குழந்தை பிறந்த குஷியில் களமிறங்கிய விராட் கோலி.! மிரட்டல் கொடுத்த இங்கிலாந்து அணி.! தடுமாறும் இந்திய அணி.!

குழந்தை பிறந்த குஷியில் களமிறங்கிய விராட் கோலி.! மிரட்டல் கொடுத்த இங்கிலாந்து அணி.! தடுமாறும் இந்திய அணி.!


india-vs-england-first-test-39VE9W

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்ம் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்  128 ரன்கள் எடுத்தநிலையில் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஜோ ரூட்டுடன், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்தது. இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களில் 578 ரன்கள் எடுத்த நிலையில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிப்லி 87, ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. 

test cricket

இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில் 29 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி 11 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய ரஹானே 1 ரன் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் பெஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினார். இப்போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களுடன் விளையாடி வருகிறது. தற்போது ஆடுகளத்தில் ரிஷப் பன்ட் 54 ரன்களுடனும், புஜாரா 53 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.