
india sets target 325 for newzland
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி நாடு திரும்பாமல் அப்படியே நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3T20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில், சாண்டனருக்கு பதில் சோதி சேர்க்கப்பட்டார். சவுத்திக்கு பதிலாக கிராண்ட்ஹோமே அணியில் இடம் பெற்றுள்ளார்.
முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதன்படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் மிகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் விளையாடி வருகிறார்கள். அதேவேளையில் அடிக்க வேண்டிய லாவகமான பந்துகளை சிக்சராகவும் பவுண்டரிகளாகவும் மாற்ற தயங்குவதில்லை. இந்த நிலையில் இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்தார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான் 66(67) ரன்களில் 25.2 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 9 பவுண்டரிகளை விளாசினார். அவரைத் தொடர்ந்து 30வது ஓவரில் ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி மற்றும் 52 அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 43 மற்றும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கடைசியாக இறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டோனி 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்தது.
Advertisement
Advertisement