பாக்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்த.. தமிழில் ட்வீட் செய்து அசத்திய சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர்!imran-thair-tweeted-for-all-tamil-fans-in-tamil

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2014 முதல் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் தாஹிர் 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வானார்.

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தினார் தாஹிர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு மிகவும் பிடித்த பௌலராக திகழந்த தாஹிர் கடந்த ஆண்டு 26 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Ipl 2020

இந்நிலையில் அடுத்த மாதம் யூஏஇ-யில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் இம்ரான் தாஹிர் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார். இந்த தொடருக்கான இந்தியாவை சேர்ந்த சிஎஸ்கே வீரர்கள் நேற்று துபாய் சென்றனர்.

அதன் புகைப்படங்களை ரீடுவீட் செய்துள்ள இம்ரான் தாஹிர் தமிழ் மொழியில் ஆங்கில எழுத்துக்களால், "என் இனிய தமிழ் மக்களே, உங்கள் நலம் நலம் அறிய ஆவல். பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம். இம்முறை வருவோம் வெல்வோம் செல்வோம் உங்கள் ஆசிகளோடு. பாக்கத்தானே போற காளியோட ஆட்டத்த, எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார்.