அடுத்து இந்தியாவுக்கு உலக கோப்பை தான் எனது டார்கெட்..! ஹர்திக் பாண்ட்யா என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

அடுத்து இந்தியாவுக்கு உலக கோப்பை தான் எனது டார்கெட்..! ஹர்திக் பாண்ட்யா என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!


harthik pandya talk about world cup

நடந்து முடிந்த ஐபிஎல் 2022 தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கோப்பையை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். முதல் அணியாக பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணிக்கு முதுகெலும்பாக இருந்தது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா என்றே கூறலாம்.

இந்த வெற்றிக்கு பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், அறிமுகமான முதல் தொடரில் எங்கள் குஜராத் அணி கோப்பை வென்றது மகிழ்ச்சி. இந்த மகத்தான வெற்றியை அடுத்த தலைமுறையினர் பேசுவர். ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்வது சிறப்பானது. இதற்கு முன், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்துள்ளேன். அதனை விட இந்த வெற்றி முக்கியமானது. ஏ

இந்த தொடரில் முதன்முறையாக கேப்டனாக கோப்பைக்கு முத்தமிட்டது ரொம்ப ஸ்பெஷல். அதிர்ஷ்டவசமாக நான் பங்கேற்ற 5 பைனலிலும், எனது அணி கோப்பை வென்றது தனிச் சிறப்பு. இந்தியாவுக்காக விளையாடுவது என்பது கனவு நனவானது போன்றது. எத்தனை போட்டிகளில் விளையாடினோம் என்பது முக்கியமல்ல. தேசத்திற்காக விளையாடும் போது எனக்கு அன்பும், ஆதரவும் கிடைக்கிறது. இந்தியாவுக்காக உலக கோப்பை வென்று தருவதே இலக்கு என தெரிவித்தார்.