இந்தியா விளையாட்டு

நடராஜனால் சிஎஸ்கே அணிக்கு குறையும் மவுஸ்.! பலம்வாய்ந்த அணியாக மாறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.!

Summary:

2021 ஐபிஎல்-ல் நடராஜன் ஆடும் சன்ரைசர்ஸ் அணிக்கே அதிகப்படியான ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 11ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடக்க உள்ளது. ஐபிஎல் 2021 தொடர் இந்த ஆண்டு ஏப்ரல் -மே மாதங்களில் வழக்கம் போல திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 8 ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்புகளை செய்து வருகின்றன.

இந்தியா ஏ அணிக்கு ஆடாமலேயே நடராஜன் இந்திய அணிக்கு ஆடி பிரமாதப்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரானார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் விளையாடி அந்த அணிக்கு பெருமை சேர்த்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜனின் பங்களிப்பு ஹைதராபாத்திற்கு பெரிய அளவில் இருந்தது . அதுமட்டுமின்றி கடைசி கட்ட ஓவர்களில் யார்க்கர் துல்லியமாக வீசி எதிரணியை திணறடித்தார். நடராஜன் கடந்த ஐ.பி.எல் சீசினில் பல விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

டி.நடராஜன் ஐபிஎல்லுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணி வெற்றி பெற பெரும்பங்கு வகித்தார். பிறகு டெஸ்ட் தொடரிலும் பிரமாதப்படுத்தி ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் எடுத்தார். இதனையடுத்து நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து ஏரளமான ரசிகர்கள் பெருகினர்.

ஐபிஎல் என்றாலே சிஎஸ்கே அணிக்கு தான் அதிகப்படியான ரசிகர்கள் தமிழகத்தில் இருப்பார்கள். தற்போது தமிழக வீரர் நடராஜன் அணைத்து போட்டிகளிலும் அசத்துவத்தால் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டங்கள் கூடியுள்ளனர். எனவே 2021 ஐபிஎல்-ல் நடராஜன் ஆடும் சன்ரைசர்ஸ் அணிக்கே அதிகப்படியான ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் வரும் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன், வார்னர், நடராஜன், சாஹாவும் இருக்கிறார்கள் என்பதால் அந்த அணியும் சற்று பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement