காயம் காரணமாக முக்கிய பேட்ஸ்மேன் விலகல்! கேப்டனும் சந்தேகம்! சோகத்தில் ரசிகர்கள்!



England palyers morken and jeson rai on injury

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. புள்ளி பட்டியலில் ஆத்ரேலியா அணி முதல் இடத்திலும், நியூசிலாந்து மற்றும் இந்தியா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் மற்றும் நட்சத்திர வீரர் ஜேசன் ராய் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 212 ரன்னில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

World cup 2019

இதனை அடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் மோர்கன் மற்றும் ஜேசன் ராய் களமிறங்காமல் ரூட் களமிறங்கினார். ஒருவழியாக 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

தற்போது இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜேசன் ராய்க்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்றும் கேப்டன் மோர்கனின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவர் விளையாடுவாரா இல்லையா என்பது ஆட்டத்தின் முதல்நாள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.