ஐபிஎல்-2020: சுழற்பந்து வீச்சாளர்களின் கை தான் ஓங்கும்; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கணிப்பு.!

ஐபிஎல்-2020: சுழற்பந்து வீச்சாளர்களின் கை தான் ஓங்கும்; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கணிப்பு.!


Dean jones tells ipl 2020 will be favour to spinners

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடரானது கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இவ்வாண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின்  மத்தியில் இருந்தது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஒருவழியாக பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் இஸ்லாமாபாத் யுனிடேட்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த டீன் ஜோன்ஸ் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இவ்வாண்டு ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதால் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

Ipl 2020

பாகிஸ்தான் லீக் தொடர் இந்த மைதானங்களில் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளராக இருந்த எனக்கு சில அனுபவங்கள் உண்டு. இந்த மூன்று மைதானங்களுமே அளவுகளில் மாறுபட்டு காணப்படுவதுடன் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை.சார்ஜா மைதானம் சிறியது அதேவேளையில் அபுதாபி மைதானம் பெரியது. இந்த வித்தியாசங்களை பிசிசிஐ எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.

இதனால் துவக்க கட்டங்களில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்தாலும் கடைசி கட்டங்களில் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களின் கைதான் ஓங்கி நிற்கும். இந்த மைதானங்களில் குறைந்தது 60 போட்டிகள் வரை நடைபெற உள்ளது. இதனால் இறுதிக் கட்டங்களில் மைதானத்தின் தன்மை மாறிவிடும். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களே அதிக ரன்களை குவிப்பார்கள்.