விளையாட்டு

ஆரம்பம் முதல் தடுமாறும் சென்னை அணி! வலுவான இலக்கை நோக்கி கைதராபாத்!

Summary:

Chennai vs hyderabad match 41 result

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணி முதல் இடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் 41 வது போட்டியில் சென்னை மற்றும் கைதராபாத் அணிகள் விளையாடிவருகிறது.

சென்னையின் சொந்த மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட் செய்த கைதராபாத் அணியின் தொடக்க வீரரான பரிஸ்டோவை இரண்டாவது ஓவரில்லையே வெளியேறினார் ஹர்பஞ்சன் சிங்க்.

அருமையான தொடக்கத்துடன் ஆரம்பித்த சென்னை அணி கைதராபாத் அணியின் அதிரடி ஆட்டத்தால் தடுமாறி வருகிறது. வார்னருடன் ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 51 ஓட்டமும், 39 பந்துகளில் 50 ஓட்டமும் பெற்று கைதராபாத் அணியின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர்.

12 ஓவர்கள் முடிவில் கைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. வார்னர், மனிஷ்பாண்டேவின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் சென்னை அணி வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.


Advertisement