முதல் பந்தில் விட்டதை ஐந்தாவது பந்தில் சாதித்த புவனேஸ்வர்! அப்படி என்ன நடந்தது தெரியுமா?

முதல் பந்தில் விட்டதை ஐந்தாவது பந்தில் சாதித்த புவனேஸ்வர்! அப்படி என்ன நடந்தது தெரியுமா?



bhuvansvar kumar second attempt


2019 ஐபிஎல் தொடரின் நாற்பத்தி எட்டாவது ஆட்டத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதெராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வார்னர் 81 ரன்கள் எடுத்தார். 

அதனை தொடர்ட்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே சறுக்கலாய் அமைந்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெயில் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அவரை தொடர்ந்து அகர்வால் 27 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பூரன் அதிரடியாக ஆட்டத்தை தொடர்ந்தார். கலீல் அஹமத் வீசிய 11 ஆவது ஓவரின் முதல் பந்தை லெக் சைடில் தூக்கி அடித்தார் பூரன். எல்லை கோட்டில் நின்ற புவனேஷ்வர்குமார் கேட்சை பிடித்து எல்லைக்கோட்டிற்கு வெளியே காலை வைத்துவிட்டார். இதனால் அது சிக்ஸராக மாறியது. 



இதனை தொடர்ந்து அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் பூரன் மீண்டும் அதே சைடில் தூக்கி அடித்தார். ஆனால் இந்தமுறை பந்து சற்று தாழ்வாககே வந்தது. எல்லைக்கோட்டில் இருந்து ஓடி வந்த புவனேஷ்வர் பறந்து விழுந்து அந்த கேட்சை பிடித்தார். 

அதே ஓவரில் நழுவவிட்ட வாய்ப்பை மீண்டும் கிடைத்த வாய்ப்பால் நிவர்த்தி செய்தார் புவனேஸ்வர். இதனால் ஹைதெராபாத் அணி வெற்றிபெற முடிந்தது. இல்லையெனில் பஞ்சாப் அணி வெற்றிபெற வாய்ப்பு இருந்திருக்கும்.