இந்திய அணியில் சாதிக்கும் தமிழன்.. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை..



Aswin takes highest wicket in International matches

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் 3 வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முன்னதாக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளது.

aswin

இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 599 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி உள்ளார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கும்ப்ளே 953 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்திலும், ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.